
800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா
800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா ,800 மில்லியன் மோசடி மெர்வின் சில்வா க்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேர்வின்சில்வா பெற்றுக்கொண்ட வருமானத்தின் அடிப்படையில், 800 மில்லியன் ரூபாய் பெருமதியான சொத்துக்கு கணக்கு காட்டாமல் ,அதை மறைத்து வைத்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில், அவருக்கு
தற்பொழுது லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது லஞ்ச ஆணைக்குழு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர் மஹிந்த அரசின் முக்கியமான அமைச்சு பதவியை பெற்றிருந்தார். அதனை அடுத்தே தற்போது இவருக்கு இந்த பிடிபறந்து கொடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல்வாதிகளை அழிப்பேன் என ,அனுரா ஆட்சி மக்களுக்கு சூளுரைத்தது . இவர்கள் வைத்திருக்கும் லஞ்ச பணத்தை மீட்டாலே நாட்டை காப்பாற்ற முடியும் என்கிறது ஆளும் அரசு .
அதனை அடுத்து தற்பொழுது லஞ்சு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேர்வின் சில்வா சொத்து தொடர்பான கணக்கறிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களில் அவர் உரிய முறையில் கணக்கு காட்டு தவற என்ற குற்றச்சாட்டு அறிவிக்கப்பட்டால் அத்தனை சொத்துக்களும் அரச உடமையாக்க க்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது.
அனுரா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை
அனுரா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை கண்டு மக்களை குஷிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதா என மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
லஞ்ச ஊழல் செய்கின்றவர்கள் கடந்த கால ஆட்சியாளர்கள் சொன்னால், தற்கால ஆட்சியாளர்கள் யாருமே அதனை செய்யவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றபோது குறிப்பிடத்தக்கது.