14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கைப் பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவர்கள் UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் 21 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
இதற்கிடையில், ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், அத்தகைய நபர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் ஈடுபடுவதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
















