
1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,1200பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியபண்டார, ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளிடம் வினவியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, நாட்டில் சுமார் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, இதன்போது கருத்து தெரிவித்த ரயில்வே திணைக்களத்தின் இயந்திரவியல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் கே.கே. ஹேவாவிதாரண, 5 புதிய ரயில் பெட்டிக் கட்டமைப்புகளை கொள்முதல் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.
அந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டவை என கே.கே. ஹேவாவிதாரண தெரிவித்தார்.