1000 ரூபாய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி

Spread the love

1000 ரூபாய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபா வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி

நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் (18) நடைபெற்றது.

பெருந்தோட்ட துறையின் முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண, முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த

அளுத்கமகே மற்றும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், புதிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,

சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான இராஜதுரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபா வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாகவும்

அன்றையதினம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பான சாதகமான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *