வீதிகடை உணவை உட்கொண்ட தம்பதிகள் குழந்தைகள் பலி
வீதிகடை உணவை உட்கொண்ட தம்பதிகள் குழந்தைகள் பலி யான சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துருக்கியில் விடுமுறையில்
துருக்கியில் விடுமுறையில் தெரு உணவை சாப்பிட்ட ஒரு தம்பதியினரும் அவர்களது இரண்டு இளம் குழந்தைகளும் உணவு விஷத்தால் பரிதாபமாக இறந்துள்ளனர்.
நான்கு பேர் கொண்ட குடும்பம் நவம்பர் 11 அன்று, ஜெர்மனியின் ஹாம்பர்க்கிலிருந்து இஸ்தான்புல்லுக்கு பயணம் செய்தனர் .
வீதி கடை உணவை உட்க்கொண்டதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்தான்புல்லில் உள்ள அவர்களின் ஹோட்டலில் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர் .
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி
அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக பலியாகினர் .
வீதி கடை உணவில் நச்சு தன்மை படர்ந்து இருந்ததால் ,இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட தம்பிதிகள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர் .
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .










