
ரசியா கடும் யுத்தம்
ரசியா கடும் யுத்தம் ,ரஷ்யா ராணுவத்தினர் யுகரன் மீது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இதனால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் ,அடுக்குமாடி கட்டிடங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலத்தில் உள் கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்தி இருந்தன.
இதன்போது 145க்கு மேற்பட்ட உள் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது கடந்த 24 மணித்தியால இடைவெளியில் மீளவும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
இதனால் ரஷ்யா படைகளின் தாக்குதலில் எட்டு மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் ,அவ்வாறு காயமடைந்தவர்கள் இருவர் சிறுவர் உள்ளடங்குமென உக்ரைன் அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த நடவடிக்கையின் ஊடாக ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்து முழுவதுமாக தமது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்குடேனேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ,கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்ற தாக்குதல் எடுத்துக்காட்டுகின்றன.
கார்கீவ் ,மற்றும் ஏனைய பகுதியின் மீதும் கடுமையான தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.