யாழ் வந்த விமானம் சென்னைக்கே திரும்பியது
யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13) புறப்பட்டது .
இந்த பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இன்று (14) காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது
- கலாநிதி பட்டத்தை இணைத்த அதிகாரிகள் இன்று சிஐடிக்கு
- உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு
- குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது
- துப்பாக்கி சூடு வீட்டின் மீது
- சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.
- சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி
- அம்பியூலன்ஸ் விபத்து
- மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு
- கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி