யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து
யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து ,யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து மருதங்கடவல நோக்கி பயணித்த ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று
வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி
வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மருதங்கடவலையிலுள்ள தனியார் கட்டுமான
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அநுராதபுரம், சாலியபுர பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிபுரியும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதனையடுத்து, பிரதேசவாசிகள் இணைந்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்ததையடுத்து, காயமடைந்த இளைஞர் மருதங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞரின் நெஞ்சுப்பகுதி மின்சாரத் தூணில்
காயமடைந்த இளைஞரின் நெஞ்சுப்பகுதி மின்சாரத் தூணில் மோதியதில், விலா எலும்புகள் மற்றும் முதுகுப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மருதங்கடவல பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு








