
மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது
மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது ,இந்தியா – மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் ஜனாதிபதி தரம்பீர் கோகுல் வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மொரிஷியஸ் சென்றார். பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (12), அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், எதிர்க்கட்சித்
தலைவர் ஜார்ஜஸ் பியர் லெஸ்ஜோங்கார்ட் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் தலைமையிலான குழுவினருடன், பிரதமர் மோடி தலைமையிலான
இந்திய குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரிஷியஸின் மிக உயரிய தேசிய விருதை, ஜனாதிபதி தரம்பீர் கோகுல் வழங்கினார்.
கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மொரிஷியஸின் மிக உயரிய தேசிய விருதை பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இதற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, இந்தியாவின் 140 கோடி இந்திய மக்களுக்கும் கிடைத்த மரியாதை.
இது இந்தியாவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுக்கு ஒரு மரியாதை” என தெரிவித்தார்