மழை வெள்ளதில் மூழ்கிய நாடு ,ஆப்கனிஸ்தானில் மழை வெள்ளதில் சிக்கி 1600பேர் காயம் ,316 மக்கள் பலி .
அதிக மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
திடீரென ஏற்பட்ட அதிக மழை வெள்ளதில் மூழ்கி ,பேரழிவில் சிக்கி தவித்து வருகிறது ஆப்கனிஸ்தான் .
இந்த கன மழை வெள்ளத்தில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்களை மீட்கும் பணி இடம்பெறுகின்ற பொழுதும் ,வெள்ள பாதிப்பில் இருந்து நாடு முற்றாக மீண்டுவரவில்லை .
மந்த கதியில் ,மீட்பு பணிகள்
வெள்ளத்தல் பாதிக்க பட்ட பகுதிகளில் மந்த கதியில் ,மீட்பு பணிகள் இடம்பெறுவதால் ,மக்கள் உயிரிழப்பு சொத்தழிவு என்பன அதிகரித்து காணப்படுகிறது .
ஆப்கனிஸ்தானில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் ஏற்பட்ட முதல் பெரும் வெள்ள பேரழிவாக இது பார்க்க படுகிறது .
பாதிக்க பட்ட ஆப்கனிஸ்தானில் மக்களுக்கு உதவிட பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன .
எனினும் தலிபான்களின் சில கட்டுப்பாடுகள் காரணமாக, முழுமையாக சர்வதேசம் ,இந்த வெள்ள பெருகிற்க்கு உதவிட தயக்கம் காண்பித்து வருவதனை தகவலும் வெளியாகியுள்ளது .