மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு. ,மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவன் வெட்டி கொலை .
வவுனியா நெடுங்கேணி பகுதியில் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ,வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கொலை நடந்தது எப்படி
இவர் எப்படி வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது, பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில் ,தற்போது மனைவி தற்கொலை புரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மனைவி நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இந்த இருவரது மரணங்களும் படு கொலையா என்ற நோக்கில்,பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க .பட்டுள்ளன
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வெட்டி படுகொலை சம்பவங்கள் ,தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
இவை இலங்கையில் குற்ற சமூகம் ஒன்று உருவாகி வருவதையும் ,மக்கள் வாழ்வியலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர் .















