மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது
மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது ,போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மகிந்த ராஜபக்சவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
நமது அரசியல் கதை என்னவாக இருந்தாலும், அவரை மறக்க முடியாது. அவர் ஒரு யுக மனிதர்.
நாட்டை போரில் இருந்து காப்பாற்றிய தலைவரே மஹிந்த ராஜபக்ஷ.
எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது சரியல்ல.
2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அது ஏன்… போரின் கடைசி நாட்களில் போரை நிறுத்த நினைத்தார்கள், ஏனெனில் இந்நாட்டு தமிழ் மக்கள் மீதுள்ள அன்புக்காகவோ அல்லது இந்நாட்டின் பிற இனத்தவர் மீது கொண்ட அன்பிற்காகவோ அல்ல. NGOக்களின் சகவாழ்வுக்காக.
இந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கவனிப்பே அன்றி வேறில்லை” என்றார்