போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
அத்துடன், பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டி நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
- எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லை

- ஜூலை 1 முதல் கட்டண உயர்வை தனியார் பேருந்து நடத்துநர்கள் கோருகின்றனர்

- மாதம் 17700 ல் ஒரு தனிநபர் வாழ முடியும் என்பதை அரசு ஏற்கவில்லை அமைச்சர்

- பிரபலங்கள் கைது அனுரா வேட்டை

- 120 மில்லியன் இலஞ்சம் தொடர்பாக SJB அமைப்பாளர் ரகித ராஜபக்சவை இலஞ்ச ஆணைக்குழு கைது செய்தது







