
பெண் எரித்துக் கொலை
பெண் எரித்துக் கொலை ,தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்