பித்து எனக்குப் பிடித்து

பித்து எனக்குப் பிடித்து
Spread the love

பித்து எனக்குப் பிடித்து

பித்து எனக்குப் பிடித்து
நித்தம் உனை நினைத்து
சத்தமாக கவிபடிக்க
எத்தனிக்கிறேன்

பல நாள் கேட்ட குரல்
சில நாளா இனிக்கிறது
கலகலவெனும் சிரிப்பு
சலசலப்பை தருகிறது

உன் கதை கேட்காமல்
உன் கவி படிக்காமல்
என் இரவு தொடங்கவில்லை
என் கனவு முடியவில்லை

உன் சமூக தொண்டு
உன் தேசிய நோக்கம் கண்டு
மிரண்டு போகின்றேன்
துவண்டு விடாது தொடர் உன்பணி

அண்மை நாட் கவிதைகளில்
என்னை இவள் காண்கிறாள்
உண்மை அதுவென்றால்
நன்மை இது தொடர்ந்திடுவாள் ..

இப்படிக்கு
இவள் உன் கவிதை
நாயகி.