பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை
Spread the love

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை பிரதமர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

1978/16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நாட்டில் அமைந்துள்ள 17 பல்கலைக்கழகங்களில் எந்த பல்கலைக்கழத்திலும் பகிடிவதைகள் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பகிடிவதைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக சுற்றுநி ரூபத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி

அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முறைப்பாட்டு செயற்பாட்டு பொறிமுறையை மிகவும் பலப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

இப்போதுள்ள துரித தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு எதிரான செயலணியை அமைத்து ஆண், பெண் சமூக சமத்துவ குழுவின் கீழான இணைக்குழுக்களின் ஊடாக வலையமைப்புகளை உருவாக்கி

எந்தவொரு பகிடிவதை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை செயற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.