
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .உக்ரைன் இந்த அறிவிப்பை ரஷ்யா இராணுவம் மறுத்துள்ளது
உக்ரைன் முன்னரங்க போர் முனையில் எதிர்ப்பு சமரில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்யா தொண்டர் படைகளை சேர்ந்த இராணுவத்தினரே, தற்போது சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது .
இரண்டு ஆண்டு முடிவுற்ற நிலையில் ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு பலத்த ஆளணி ,ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
தொடரும் போர்
ஆனால் அது கடந்து தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இடைவிடாது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து காணப்படும் நிலையில் ,தாங்களே வெற்றியாளர்கள் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
சரண் அடைந்த ரஷ்யா இராணுவத்தினருக்கு சகல மரியாதைகளும் வழங்க பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்படியான ,வசதிகள் செய்து தரப்படும் என உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் உக்ரைன் இராணுவத்தின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வருகிறது .