
தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது
தீக்குச்சியை பற்றவைத்து காட்டுக்குள் வீசியமையால் அந்த காடு எரிந்துள்ள சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் ஏத்துகல மலை உச்சியில் தீக்குச்சிகளை ஏற்றி தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் இந்த ஜோடி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டது.
இளம் ஜோடியை திங்கட்கிழமை (21) வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி நளீன் ஜே எதிரிசிங்க உத்தரவிட்டார்.
மஹவ நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் (28) மற்றும் அவரது காதலி என கூறப்படும் கண்டி வத்தேகம பகுதியை சேர்ந்த யுவதி (20) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது
குருநாகல் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் குருநாகல் தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் முயற்சியுடன் தீயை அணைத்தனர்.
வடமேற்கு மாகாண சபை வளாகத்திற்கு அருகில் உள்ள பழங்கால கல் படிக்கட்டு நுழைவாயிலின் நடுவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபரான தம்பதியினரின் கவனக்குறைவால் தீ கட்டுக்கடங்காமல் பரவியிருந்தால் இந்த நாட்களில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் காற்று காரணமாக அதுகல பிரதேசம் மற்றும் குருநாகல் புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் தீப்பிடித்து பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏத்துகல உச்சியில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் தொலைபேசி தொடர்பாடல் நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.