
திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு
திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு ,திருகோணமலையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு
திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குச்சவெளி கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்
படகு மற்றும் சுருக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மீன்பிடிக்கக்கூடிய சட்டம்
சுருக்கு வலையை பயன்படுத்தி சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மீன்பிடிக்கக்கூடிய சட்டம் இருப்பதாகவும் அதை மீறி மீன்பிடித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.