
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளது .
அவ்விதம் தெற்கு காசா ஜெபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் இராணுவத்தினரை உள்ளே நுழைய விட்டு ,கண்ணி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
கண்ணிவெடி தாக்குதல்
ஹமாஸ் மக்கள் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் ,மூன்று இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியான மூன்று இராணுவ தளபதிகளில் இருவர் 21 வயது மற்றும் 20 வயதி கொண்ட, இஸ்டாப் சார்யன்ட் தரத்திலான அதிகாரிகளே பலியாகியுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தாக்குதல் படையணிகளுக்கு பலத்த இழப்பு
எட்டு மதங்களாக தொடரும் யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய முதன்மை தாக்குதல் படையணிகள் பலத்த இழப்பை சந்தித்து களத்தில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் .
அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படைகள் உடைந்த வீடுகளுக்கு கால் வைத்து நடக்கும் பொழுது கண்ணிவெடிகளை புதைத்து வைத்து ,அதன் ஊடக பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது ஹமாஸ் போராளிகள் படை .
திடீர் திடீரென ஹமாஸ் நடத்தும் கண்ணிவெடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளதாக மேற்படி இராணுவ தளபதிகள் மூவர் பலியான விடயம் எடுத்து காட்டியுள்ளது .