காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்
காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து இன்று (27) நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
காலி சிறைச்சாலையில் நேற்று (26) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், இருவர் காலி – கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மோதலில் காயமடைந்த ஏனைய இரண்டு கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹுங்கல்ல ‘லொக்கு பெட்டி’ மற்றும் ‘கரந்தெனிய சுத்தா’ ஆகிய பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி








