
கதிர்காம பாதயாத்திரை
கதிர்காம பாதயாத்திரை ,55 நாட்களில், 98 ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரம் நடை வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி
ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை இன்று (11) காலை 7.30 மணிக்கு தவத்திரு .நா.க.சி .கணபதி கதிர்வேலு திருநீற்று சித்தர்
தலைமையில் தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
அதன் முதல் அங்கமாக நேற்று (10) கார்த்திகை நன்நாளில் ஆலயத்தில் மருதர்காமர் வழி வந்த முருகனின் அம்சமான ஐயாக்களிடம் வேல்
விசேட பூசைகள்
கையளிக்கப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை வேலுக்கான விசேட பூசைகள் இடம்பெற்று தலைமை தாங்கும் திருநீற்று
சித்தர் அவர்களிடம் வேல் கையளிக்கப்பட்டு 150 மேற்பட்ட யாத்திரீகர்களுடன் முருக நாமம் எங்கும் ஒலிக்க பாதயாத்திரை ஆரம்பமாகியது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை 7
மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.