கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ, இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட மூன்று நாள்
உத்தியோகப்பூர்வ இந்தியப் பயணத்தை நிறைவுசெய்து, இன்று (30) நாடு திரும்பினார்.
இந்தப் பயணத்தின் போது, வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ, இருதரப்பு பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில்
கவனம் செலுத்தி, மூத்த இந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்ச்சியான உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினார்.






