ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு
லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன.
இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளது.
அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு
இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது
- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி











