
ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது
ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது
இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு
எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்
தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024
- வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
- என்னை பார்ப்பாயா பதில் சொல்
- மீண்டும் பதிகின்றேன்
- நீறாகிப் போன நினைவுகள்
- கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா