எரிசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம்
எரிசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைத்தது.
இன்று பிற்பகல் இந்தத் தீர்மானம் ஒப்படைக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக உறுதிப்படுத்தினார்.
அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானத்தில் பாராளுமன்றத்தின் ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.







