
இஸ்ரேல் கைதிகள் பலி
இஸ்ரேல் கைதிகள் பலி யாகியுள்ளதக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளில் நால்வர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பலியான நால்வரும் வயோதிபர்களாக காணப்படுகின்றனர் .
நிரந்தர போர் நிறுத்தம்
நிரந்தர போர் நிறுத்ததை ஏற்படுத்த மறுத்த கைதிகளை விடுவித்த பின்னர் ,மிக பெரும் தாக்குதலை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் மீது நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது .
அதனை அடுத்தே தற்போது மக்கள் ,இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக லட்ச கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .
கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்பு
அவ்வாறன நிலையில் தற்போது கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
என்ன விலை கொடுத்தாவது கைதிகளை விடுவிக்கும் படி கோரப்பட்ட நிலையில் ,அதனை தட்டி கழித்து வந்த இஸ்ரேலுக்கு தற்போது ,கைதிகள் இறப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .