ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு வழக்கு

Spread the love

ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு எதிராக வழக்கு

பிரிட்டனுக்கும் நுழையும் அகதிகளை ரூவாண்டாவுக்கு அனுப்பிடும் பிரிட்டனின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டுள்ளது


பிரிட்டனில் இருந்து ரூவாண்டாவுக்கு முதலாவது அகதிகளை விமானம் மூலம் எடுத்து செல்ல படவுள்ளது


இவ்வாறு அனுப்பபட உள்ள ஐந்து அகதிகளை உடன் தடுத்து நிறுத்த கோரி இந்த வழக்கு அவசரமாக தொடுக்க பட்டுள்ளது

இது மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ள படுகிறது

ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு வாழக்கு

அவசர வழக்காக அமைய பெற்றுள்ள இந்த வழக்கில் வழங்க படும் தீர்ப்பை அடுத்தே ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் விடயம் தொடர்பில் தெரிய வரும்

இந்தியராக விளங்கும் குடிவரவு குடியகல்வு அமைச்சர் மேற்கொள்ளும் அகதிகளை அனுப்பும் நகர்வு இனவெறியுடன் கூடிய ஒன்று என அகதிகள் தரப்பில் காரசராமாக பேச படுகிறது

இந்த அகதிகள் விடயம் பிரிட்டனுக்கு , ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

அவசர வழக்காக இந்த வழக்கு அமைய பெற்றுள்ளதால் இந்த அகதிகளை காவி செல்ல தயராக இருந்த விமானம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

நீதிமன்ற வழக்கு விசாரணையில் இந்த விவகாரம் உள்ள நிலையில் அகதிகளை அனுப்பும் விடயம் தடுத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது

கோம் ஆபீஸ் லாயரும் இந்த அகதிகள் பயணம் தடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகிய நிலையியல் பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

அதனை தடுத்து நிறுத்தவே ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டத்தை அரசு மேற்கொண்டிருந்தது

தொடர்ந்து அகதிகள் வருகைக்கு பெருகிவிடும் என்பதால் வேறு வழியின்றி அவுஸ்ரேலிய மேற்கோளும் அகதிகளை அனுப்பும் விடயம் தொடர்பிலான கடும் சட்ட நடவடிக்கையை பிரிட்டனும் கையாள முனைகிறது

ருவாண்டா படுகொலைகள் ,கடத்தல்,காணாமல் போதல் என்பனவற்றில் முதன்மையன நாடாக விளங்குகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply