ரசியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய சீனா

Spread the love

ரசியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய சீனா

உக்கிரேன் மீது ரசியா 29 நாட்களை கடந்து தொடர்ந்து போரினை நடத்தி வருகிறது ,இந்த சமரில் உலக வல்லாதிக்க நாடுகளின் பெருமளவான ஆயுதங்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரேன் இராணுவத்தால் பயன்படுத்த படுகின்றன

இவ்வேளை ரசியாவுக்கு சார்பாக களத்தில் குதித்த சீனா கனரக ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது சீனா வழங்கிய இந்த ஆயுதங்கள் உக்கிரேன் போர்க்களத்தில் சீனாவும் சோதனை செய்து வருகிறது

தமது தயாரிப்பு ஆயுதங்களின் தாக்குதல் வீச்சும் அதன் சேதங்களும் எவ்விதம் உள்ளது என்பதை சீனாவும் அறிந்துள்ளது

எங்கள் நண்பன் ரசியாவை எதிரி நாடுக்ளிடம் விட்டு கொடுக்க முடியாது என சீனா

உரத்து தெரிவித்து வருகிறது ,உக்கிரேனில் அமைதியை நிலை நாட்ட சீனா அதிபருடன் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்

இவரது இந்த பேச்சு எதிர்பார்த்த வெற்றியினை அளிக்கவில்லை என்பதாக பார்க்க படுகிறது

உக்கிரேனை ரசியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றி விட வேண்டும் என்பதில் பிரிட்டன் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை தீவிர கவனம் செலுத்தி வருகின்றன

ஐரோப்பாவுக்குள் நுழையும் முதல் கட்ட இராணுவ நகர்வாகவே ரசியாவின் இந்த தாக்குதல் என்பதாகும்

ரசியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய சீனா

இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சீனா தயாரிப்பு ஏவுகணைகள் உக்கிரேன் போர்களத்தில் ரசியா பயன் படுத்தி வருகிறது

ஏவுகணை தயாரிப்பில் தனக்கு என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள

ரசியாவினால் இதுவரை உக்கிரேனை முற்று முழுதாக ஆக்கிரமித்து கொள்ள இயலவில்லை

இது ரசியாவின் இராணுவ பலவீனத்தை எடுத்து காட்டுவதாக பார்க்க படுகிறது வீழ்ந்து மீசையில் மண் ஒட்டாத கதையாக ரசியா இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது தனது வல்லாதிக்க இராணுவ நகர்வை தொடர்ந்த வண்ணம் உள்ளது

ரசியாவுக்கு ஆதரவாக சீனா நாடு ஆயுதங்களை கையளித்து வருவது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

இந்த பரஸ்பர ஆயுத பாவனை கையளிப்பு உக்கிரேன் களத்தில் சர்வதேச வல்லாதிக்க நாடுகள் போட்டி போட்டு தமது ஆயுதங்களை சோதனை செய்வதை காண்பிக்கிறது

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply