கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

Spread the love

கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மீது கமாஸ் ,ஜிகாத்த போராளிகள் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் ,இந்த ரொக்கட் தாக்குதலால் இஸ்ரேல் பலத்த சேதமடைந்து ,வரலாறு காணாத பேரழிவை அது சந்தித்தது

மேற்படி தாக்குதல் இஸ்ரேல் மீது இடம்பெற போகிறது என்பதை கண்டறிய மறந்த தற்போதைய உளவு தலைவர் செயல் பாடுகள் திறன் பட்டதாக இல்லாத காரணத்தால் நெத்தன்யாகு இவரை நியமித்துள்ளார்

இதுவே உளவுத்துறைக்குள் முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,புதிதாக நியமனம் பெற்றுள்ள David Barnea மிக சிறந்த நபர் எனவும் ,இவரது காலத்தில் இஸ்ரேல் சர்வதேச அளவில் பெரும் படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல் ,பல முக்கிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

அவ்வாறான திறன் கொண்ட இவர் இஸ்ரேல் நாட்டுக்கு பலமாக இருப்பார் என கருதுகிறார் ஆளும் அதிபர் ,


ஆனால் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கையால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்கிறது என்பதையும் ,இஸ்ரேல் பலம் பொருந்திய எதிரிகளை வளர்த்து அதனால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை உணர மறந்து போயினர்

இவரது குறி இப்பொழுது ஈரான் மீதே திரும்பியுள்ளது, ஈரான் அணு உலையை தகர்த்து பெரும் அடியை வழங்கிட இஸ்ரேல் பலத்த முனைப்பு காட்டி வருகிறது

88 வீதம் யுரேனியம் செறிவு பெற்றுள்ளதாக ஈரான்தெரிவித்து வருகிறது,
நூறு வீதம் முழுமையடைந்து விட்டால் ஈரான் அணுகுண்டை சோதனை செய்து விடும்,
அதற்கு முன்னர் அந்த நாட்டு அணு கூடத்தை அழித்துவிட இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது

அடுத்து இஸ்ரேல் நடத்த போகும் பெரும் தாக்குதல் ,ஈரான் அணு உலை தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது

அப்படியானால் போர் பெரிதாக வெடிக்க போகிறது ,அதற்கான முன் கள தயாரிப்புகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது,பெரும் மனித உயிர் பலிகள் ஈரானில் ஏற்பட போகிறது ,அதன் எதிரொலி இஸ்ரேலுக்கும் கடும் இழப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்

வன்னி மைந்தன் –

Leave a Reply