உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

Spread the love

உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த மண்ணை ஆக்கிரமித்து வருகிறது

ரசியாவின் இந்த நில ஆக்கிரமிப்பிற்கு கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ உள்ளிட்ட நேச நாடுகள் கடும் அதி திருப்தியை வெளியிட்ட வண்ணம் உள்ளன

உக்கிரேன் எதிரி ரசியா படைகள், அந்த மண்ணில் துடைத்தழிக்க பட்டு ,ரசியா இராணுவத்தின் பலம் சிதைக்க பட்டு வருவதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட உளவுத்துறைகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன

உக்கிரேனில் வைத்தே ரசியாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என அமெரிக்கா நேச நாடுகள் கங்கணம் கட்டி தொடராக புதிய ஆயுதங்களை வழங்கிய வண்ணம் உள்ளது ,

அத்துடன் நிற்காது செய்மதி வெளியான தமது உளவு தகவல்களையும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கிய வண்ணம் உள்ளன

தொகுதி தொகுதியாக பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய வண்ணம் உள்ளன ,அமெரிக்கா,பிரிட்டன் முதுகில் ஏறி நின்றவறே உக்கிரேன் இராணுவத்தினர் எதிரியாக விளங்கும் ரசியா படைகளுக்கு எதிராக போர் புரிந்த வண்ணம் உள்ளனர்

கருங்கடல் பகுதியில் இருந்து உக்கிரேன் தலை நகர் மற்றும் அதனை அண்மித்த ரயில்வே நிலையங்கள் மீது எல்லாம் எதிரி படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன

உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாவே பிரிட்டன் பல் குழல் ரொக்கட் செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது

உக்கிரேனுக்கு எவர் எல்லாம் ஆயுதம் வழங்கு கிறார்களோ அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் மிரட்டல் விடுத்துள்ளார் ,ஆனால் அதனை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்வதாக இல்லை

ரசியா உங்கள் எதிரி மட்டும் அல்ல எங்கள் எதிரி கூட என்றே அமெரிக்கா,பிரிட்டன் நேச நாடுகள் கூறி வருகின்றன

உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக வீழ்ச்சியுற்றால் அதுவே ஐரோப்பாவுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்பதால் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேக வேகமாக நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றது

இவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ளாமலா ரசியா இருக்கும் ..?
எதிர் வரும் நாட்கள் உக்கிரேன் களம் என்றும் இல்லாதவாறு குண்டுகளினால் அதிர போகிறது ,பல்லாயிரம் மக்கள் பலியாக போகின்றனர்

பிரிட்டன் அமெரிக்கா ஆயுதங்கள் ரசியா மேற்கொள்ள போகும் புதிய ஆயுத பாவனை முன்னால் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply