அனுராத புரம் சென்று ஆட்சி ஏறிய கோட்டாவை விரட்டிய மக்கள்

Spread the love

அனுராத புரம் சென்று ஆட்சி ஏறிய கோட்டாவை விரட்டிய மக்கள்

இலங்கை பவுத்த பேரினவாத சிந்தைக்குள் புரையோடிப்போயுள்ள சிங்கள மக்களின் இனவாதத்தை தோண்டி கிளறி அதில் அரசியல் அதிகாரத்தில் குளிர் காய்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர் கோட்டபாய அனுராதபுரம் சென்று ஜனாதிபதியாக பதவி ஏற்றார் .

புலிகளை அழித்து விட்டதால் தானே சிங்கள மக்களின் கீரோவாக உருவெடுத்து ,தலைக்கனம் மேலேறி ஆடிய கோட்டாவுக்கு , அதே சிங்கள மக்கள் நாயை போல அடித்து விரட்டிய கேவலம் இடம்பெற்றுள்ளது.

புலிகள் புராணம் பாடி பல லட்ச்சம் பணத்தை வழங்கி ஆட்சி அதிகாரம் ஏறியவர்கள் .பின்னர் அதே புலிகளை அழித்த கொடூரம் நடந்தேறியது .

புலிகள் பணத்திற்கு அடிபணிந்து புரிந்த வரலாற்று துரோகம் அவர்களை இல்லாது அழித்தது .அந்த பெறுபேரை ரணில் போட்டு வைக்க மகிந்த முடித்து வைத்தார் .

இன்று இலங்கையில் விடுதலை புலிகள் இல்லாத நிலையில் சிங்கள மக்கள் பயம் இன்றி நாடு முழுவதும் உலவிட முயன்றதுடன் தமிழ் மக்களையும் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது .

தமிழர்கள் அழிந்து சூடுகாடான பகுதியை ஆள்வதையும் தமது வாழ்விடங்கள் செழிப்பாக உள்ளதும் கண்டு உள்ளம் நொந்து இருப்பார்கள்.

அவ்விதமான கால சூழல் இனவெறி சிங்கள மனங்களில் மாற்றங்கள் மெல்ல இடம்பெற்ற வண்ணம் நகர ,ராஜபக்ச குடும்பம் நாட்டை கொள்ளையடித்து கூறுபோட்டு விற்று வந்தது.

தமிழரின் சாபமும் ,கண்ணீரும் ரணில் கோட்டா ஆட்சியை துரத்திட மக்கள் அவர்கள் வீடுகளை சுற்றிவளைத்து எரித்தனர் அடித்து நொறுக்கினர்.


மக்களால் துரத்த படும் ரணிலும் கோட்டாவும் ஆட்சியில் மீளவும் அமர துடிப்பது ஏன் ..?

இந்த கேள்விக்கு ரணிலிடமும் கோட்டாவிடம் பதில் இல்லாது போனது வியப்பின் மேல் வியப்புதான் .

எந்த ஒரு அதிகாரம் அந்த மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பிரயோக்கிறதோ அன்று அந்த அதிகாரம் காணாமல் போகும் என்பது இன்று இலங்கையில் சிங்கள தேசத்திற்கு நடந்தேறியுள்ளது .

மக்கள் விழித்தல் மீள அவர்களை ஏமாற்றுவது கடினம் .இலங்கையில் இவ்விதமான நிகழ்வு வரும் காலங்களில் இயல்பாக தொடரும் நிலை ஏற்பட போகிறது என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டம் .

    Leave a Reply