யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்


யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள

அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் யாழ்ப்பாண நகர்

பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்ததோடு

பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் பங்குபற்றுதலுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களை சுகாதார நடைமுறைக்கு ஏற்ப கைகளைக் கழுவி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி

வகுப்பறைக்குள் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை இந்த வாரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் முன்னெடுக்கவுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள்
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள்

கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமைய மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழில் உள்ள

பாடசாலைகள் அனைத்தும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டன. பாடசாலை ஆரம்பிக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிரதேச செயலர்

ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன