பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்

Spread the love

பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்

உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம்.

பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்


பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்
உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக்

கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் அதுபோன்ற அறிகுறி இருந்தால் கவனம் செலுத்துதல் அவசியம்.

கர்ப்பப்பை வாய் தொற்று : கர்ப்பப்பையின் வாய் பகுதி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவின் போதோ அல்லது பின்பும் கடுமையான வலியை உண்டாக்கும்.

பெண்ணுறுப்பு வறட்சி : உடலுறவின் போது மென்மையாக இருக்க பெண்ணுறுப்பின் வாய்ப் பகுதியில் திரவம் வெளியேறவில்லை எனில் வலி ஏற்படும்.

முடி , காயம் : பிறப்புறுப்பில் முடியின் தொற்றால் பருக்கள் உண்டாகி உராய்வின் போது வலியை உண்டாக்கலாம். உட்புறத்தில் காயங்கள் இருந்தாலும் உராய்வினால் வலி ஏற்படலாம்.

தவறான நிலை : உடலுறவு நிலைகளை படத்தில் பார்த்துவிட்டு அப்படியே முயற்சி செய்யாதீர்கள். புதிதாக அந்த நிலைகளை மேற்கொண்டாலும், தவறாக செய்தாலும் வலி உண்டாகும்.

குழந்தை பெற்ற தாய் : சமீபத்தில் தான் குழந்தையை ஈன்றிருக்கிறீகள் என்றாலும் வலி உண்டாகும்

ஆக்ரோஷமான உடலுறவு : ஆக்ரோஷமாக உடலுறவு மேற்கொண்டாலும் அடி வயிற்றில் , பிறப்புறுப்பில் வலி உண்டாகும்.

பாலியல் தொற்று : பலருடன் உடலுறவு மேற்கொள்பவர் எனில் அதனால் தொற்று ஏற்பட்டிருந்தால் வலி உண்டாகலாம். ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் தொற்று ஏற்படலாம்.

கருத்தடை பயன்பாட்டில் சிக்கல் : ஆணுறையை சரியாக அணியவில்லை என்றாலும் பிறப்புறுப்பிற்குள் சென்று வலியை உண்டாக்கலாம்.

விருப்பமின்மை : உடலுறவில் விருப்பமில்லை எனில் பெண்களின் பிறப்புறுப்பு ஆண்களுக்கு இணைந்து கொடுக்காது. பிடிப்புடன் இருக்கும். அந்த சமயத்தில் நுழைய முடியாமல் வற்புறுத்தும்போது வலி ஏற்படும்.

பயம் , பதட்டம் : உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை, பயம், பதட்டம் போன்றவை இருந்தாலும் அந்த உடலுறவை அசௌகரியமாக்கும். அந்த சமயத்தில் உடலுறவு மேற்கொண்டாலும் அது வலி கொண்டதாக இருக்கும்.

Leave a Reply