பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்


பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள்

பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணி அளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, பொதுமக்களால் வழங்கப்பட்ட

தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிசு புதைக்கப்பட்ட சிசுவை மீட்க, ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டதோடு, நீதவான்

தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு சிசுவின் சடலம் மீட்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, 26 வயதுடைய பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், திருமணமாகாதவர் எனவும், இரண்டாவது முறையாக குழந்தையை

பிரவசித்து கொன்றமைக்கான தடயங்களும் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக

விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.