சீனா ,இலங்கை உறவு மிக நெருக்கம் – பாதுகாப்பு மந்திரி


சீனா ,இலங்கை உறவு மிக நெருக்கம் – பாதுகாப்பு மந்திரி

அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில்

கட்டியெழுப்பப்பட்ட சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருவதாக

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் நேற்றைய முன்தினம் இடம்பெற்ற சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னைநாள் அதிகாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம

அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், மாபெரும் இந்த சர்வதேச நிகழ்வானது இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவை நிச்சயபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் “கடினமான வேளையில் கை கொடுப்பவனே உண்மையான நண்பனாகும்” எனவும் தெரிவித்தார்.

முன்னைனாள் அதிகாரிகள் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களை தெரிவித்த

பாதுகாப்புச் செயலாளர், பௌத்த மதம், வர்த்தகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் உலகளாவிய இணைப்பு உட்பட பல

வழிவகைகளில் சீனா இலங்கையின் வரலாற்று ரீதியான நட்பு அணியாக தடம் பதித்துள்ளதாக தெரிவித்தார்.

“அண்மைக்காலங்களில் உள்நாட்டிலும் உலகளாவிய மட்டத்திலும் நாடு எதிர் நோக்கிய கடினமான வேளையில் சீனாவினால்

வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை இலங்கையர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என அவர் உறுதி அளித்தார்.

நாட்டில் தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது எதிரிகளுக்கு

எதிராக தலை சிறந்த திட்டங்கள் மற்றும் உத்திகளை கையாள போரியல் நிபுணத்துவம் வழங்கி பயிற்சி அளித்தமைக்காக சீனா

அரசாங்கத்திற்கும் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னைனாள் அதிகாரிகள் சங்கத்தின் இந்த அங்குரார்ப்பண நிகழ்வானது, இரு

நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இறுக்கமான இணைப்பினை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜிவி. ரவிப்பிரியவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னைனாள் அதிகாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண விழாவில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், முன்னாள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு

ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டொங், தூதரக அதிகாரிகள், ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்