கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா,

Spread the love

கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா

கொரோனாவை கொன்று விரட்ட சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை

கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்று மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி

வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: “என் இனிய தமிழ் மக்களே, இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும், போராட்ட யுத்தத்தில்

, பல சூழ்நிலை காலக்கட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களை கண்டது, நம் பாரத பூமி. நிபா வைரஸ், சிக்கன்குனியா,

டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக்நோய், ஆந்த்ராக்ஸ், எச்.ஐ.வி. என பல ஒட்டுண்ணிகள் நம் தேசத்தை அச்சுறுத்தியை நாம் அறிந்தோம் , கடந்து வந்தோம்.

பாரதிராஜா

அதுபோலவே வளரும், விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சிரியமானவை தனிமனித, சுகாதாரமே, தேச நலன் என


நம் பாரதபிரதமர் மோடி அவர்களின் ஊரடங்கு உத்தரவிற்கும், விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும், கைகொடுப்போம். நம் தமிழக அரசின் முயற்சியின் ,வேகங்களும், பாரட்டுக்குறியவை.

இன்று ஓர் நாள் சூரிய ஒளி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பலபோராட்டங்களை

வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை கொன்று , விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவை விரட்ட
கொரோனாவை விரட்ட

Spread the love