கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு


கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும்

வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளைய தினம்

அதாவது 2020 அக்டோபர் மாதம் 26ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய உணவுப்

பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும்

என கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.