கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை


கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை

கமல்ஹாசன் குறித்து ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர்

தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை


மெக்கன்ஸி வெஸ்ட்மோர், கமல்ஹாசன்
ஹாலிவுட்

படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம்,

அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.

வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும், பாடகியாகவும்

வலம் வருகிறார். இவர் தனது டுவிட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர்.

நான் சிறிய பெண்ணாக இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு

என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன.

2வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த

இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன்

பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்