ஏன் என்னை ஏமாற்றினாய் …?

ஏன் என்னை ஏமாற்றினாய்

ஏன் என்னை ஏமாற்றினாய் …?

நீ எறிந்த வெடிகுண்டு
என் மனதை உடைக்கலையே
என் மீது காதல் கொண்டு
அது வீழ்ந்தும் வெடிக்கலையே

குண்டுக்கே என் மீது
கொலை வெறி காதலடி
உங்ககேனோ என் மீது
இல்லையது பிரியமடி …?

வாய் எல்லாம் பொய்வைத்து
வழி யோரம் நடப்பவளே
விழியிரண்டு நீர் கொட்ட
வீழ்ந்தழுவாய் காத்திரு

பாவை உன்னை நான் தேடி
பாதணிகள் தேய்ந்திருச்சு
அது கூடி என்னோட
அரை உடல் இழந்திருச்சு

என்னை காத்த அது இன்று
எமன் வாயில் சிக்கிருச்சு
அதுக்குள்ள பாசம் கூட
உனக்கில்லா ஏன் போச்சு …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 13-01-2021

ஏன் என்னை ஏமாற்றினாய்
ஏன் என்னை ஏமாற்றினாய்
Spread the love