உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா நூற்றி இரண்டாவது நாளாக இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளது

கடந்த தினம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகர் மீது முதன் முதலாக ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது


இந்த ஏவுகணைகள் யாவும் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது

கார் திருத்தும் இடம் என தெரிவித்து அங்கு வைத்து சேதமாக்க பட்ட டாங்கிகள் திருத்த

பட்டு வந்துள்ளது, அவ்விதமான ஆயுத கிடங்கு மீதே ரசியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன

இவ்வாறு ரசியா இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை தமது வான் காப்பு

படைகள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

கருங்கடல் பகுதியில் ஐந்து ரசியா போர்க் கப்பல்கள் திடீரென குவிக்க பட்டுள்ளது என நாம் தெரிவித்தோம் அல்லவா


இந்த கப்பல்கள் திடீர் குவிப்பின் பின்னால் ரசியா பெரும் தாக்குதலுக்கு தயராகும் என தெரிவித்தோம் அல்லவா தற்போது அவை இடம் பெற்றுள்ளது

கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா தெரிவித்ததன் நோக்கம் இது தான் போலும்

மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வருகின்றன ,அவர்களின் ஆயுத தொகுதிகள் யாவும் உக்கிரேனில் வைத்து அழிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

மேலும் மேற்குலக நாடுகள் வலிந்து போருக்கு தம்மை இழுத்து வருகிறது எனவும் அது அவர்களுக்கு சிறந்தது அல்ல எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளது

உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

எதிரிகள் தம்மை வம்புக்குக்கு இழுத்தால் எதிரி கோட்டைகள் தகரும் என ரசியா காட்டமாக தெரிவித்துள்ளது

எதிரி நாடான உக்கிரேன் தலை நகர் தற்போது ரசியாவின் நேரடி தாக்குதல் எல்லைக்குள் உள்ளாக்க பட்டுள்ளது ,வரும் நாட்களில் அகோர தாக்குதல்

உக்கிரேன் தலை நகர் கீவ் மீது மேற்கொள்ள பட போகிறது என்பதற்கு இந்த திடீர் ஏவுகணை நேரடி தாக்குதல்கள் கட்டியம் இடுகின்றன

அப்படி என்றால் உக்கிரேன் முழுவதுமாக உக்கிர தாக்குதலை ரசியா இராணுவம் நடத்த போகிறது ,இங்கு இதுவரை பாவிக்க படாத ,புதிய வகை ஆயுதங்களை ரசியா

பாவனைக்கு உட்படுத்த பட போகிறது, அப்படி என்றால் பெரும் பேரழிவை உக்கிரேன் சந்திக்க போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.

  • வன்னி மைந்தன் –

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply