இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவைகள் யாவும் முடக்க பட்டுள்ளது .இதனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் தவித்து வருகின்றனர் .

மோசமான எரிபொருள் தட்டுப்பாடு

ஆட்டோ டாக்சி டிலிவரி செய்து பிழைத்து வந்த மக்கள் தமது தொழில் துறையை முற்றாக இழந்துள்ளனர் .

எரிபொருள் தட்டுப்பாட்டால் சீற்றத்தில் உள்ள மக்கள் ஆளும் அரசு மற்றும் அந்த அரச இயந்திரமாக செயல் பட்டு வரும் பொலிஸ் மக்களுக்குள் இடம்பெறும் மோதல் சம்பவம் பெரும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறது .

காவல்துறை இராணுவத்திற்கு எரிபொருள்

காவல்துறையினர் இராணுவத்தினர் தமது வாகனங்களில் சென்று எரிபொருளை நிரப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .

எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி அரசு

ஆனால் மக்கள் நாள்கணக்காய் காத்துக்கிடந்தும் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை .

எமக்கு வேண்டும் எரிபொருள்

இதனை எதிர்த்து கேள்வி கேட்ட சிங்கள மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதுடன் அவர்கள் வண்டிகளும் சேதமாக்க பட்டுள்ளன .

தொடர்ந்து இந்த காவல்துறை இராணுவத்தின் அடக்குமுறைகள் நீடித்து சென்றால் அதுவே ஆளும் கோட்டபாய ரணில் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

மக்கள் அரச சொத்துக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கும் நிலை உருவாக்கம் பெறும் மிக பெரும் ஆபத்தான நிலைக்கு இலங்கைசென்ற வண்ணம் உள்ளது.

திட்டமிடப்படும் படுகொலைகள்

எரிபொருள் பெறும் காவல்துறை இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அது வன்முறையாக மாற்றம் பெறும் நிலை ஏற்பட்டால்,அங்கே துப்பாக்கி சூட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடலாம் .

இதன் பொழுது அப்பவி மக்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது.இந்த படுகொலை களம் திறக்க படவுள்ளது என்பதை அடித்து கூறுகிறோம் .

முதன் முதலாக சிங்கள மக்களை நேரடியா சிங்கள காவல்துறை இராணுவம் தாக்கும் சம்பவங்கள் இன்று அரங்கேற்ற பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ,மீளவும் கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

இவ்வேளை தமிழர்கள் மிக பொறுமையுடன் செயல் படுவது அவசியம் .அவ்வாறு தவறின் அப்பாவி தமிழர்கள் இதே சிங்கள இனவாத இராணுவத்தினரால் படுகொலை செய்ய படும் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்க பட்டுள்ளன .

அசைந்து செல்லும் களமுனை அதன் திட்டமிடல் நிகழ்வு செயல்பாடுகள் தற்போது எதிர்வு கூறியவாறு செல்கிறது.

தயராகும் எரிபொருள் வன்முறை

எதிர்வரு சில நாட்களில் இதன் உக்கிரத்தை இலங்கை சந்திக்க போகிறது .நாம் முன்னர் கூறியது போன்று இலங்கை ஒரு மியான்மாராக மாற்றம் பெறப்போகிறது .

,இனவாத சிங்களத்தினால் தமிழர்கள் படு கொலை செய்ய படும் நிலையும் அவர்கள் சொத்துக்களும் சூறையாட படும் நிலையும் உருவாக்கம் பெற போகிறது.

இதனை புரிந்து கொண்டு தமிழர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.தமிழர்களே உங்கள் வீடுகளை தேடி இனவாத காடையர்கள் உள்நுழைவர்கள் அதனை எதிர்கொள்ள தயராக இருங்கள் .

  • களமுனை ஆய்வு – வன்னி மைந்தன்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்