அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு


அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை:

ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல்

கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக

இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.

மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்

இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.