மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்

Spread the love

மலையத்தின் பாடசாலை ஒன்றில்
மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி
புதிய சூத்திரம்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் தமிழ்

வித்தியாலயத்திற்கு தற்போது மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக நடைபெற்று வரும்

இடமாற்றத்திற்கு அமைய புதிய அதிபர் ஒருவர் இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேற்படி குறித்த பாடசாலையில் பதவி வகித்த அதிபர் திருமதி ஆர்.பத்மாவதி ரொச்சைல்ட் தோட்ட பாடசாலைக்கு இட மாற்றம் பெற்றுள்ளார். பிளக்போரஸ்ட் தமிழ்

வித்தியாலயம் ஒரு ஆரம்ப பாடசாலையாகும். இங்கு 69 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். 04 ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர்

இவ்வாறான நிலையில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் புதிய இடமாற்ற சூத்தித்தின் படி ஒரே

குடும்பத்தை சேர்ந்த அதிபர் தரம் 111 கொண்ட மகன் அதிபராகவும் அவரின் சிரிய தந்தை அதிபர் தரம் 11

கொண்ட அப்பா உப அதிபராகவும் இடமாற்றம் பெற்றுள்ளார்.

மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்

மலையக பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாகுறையும் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகமாக நிலவி வருவது

யாவரும் அறிந்த விடயம். இந் நிலையில் இருக்கும் கல்வி வளங்களை முறையாக பிரித்து அனைத்து தோட்ட

மாணவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். சாதாரணமாக 69 மாணவர்கள் கல்வி

கற்கும் பாடசாலை ஒன்றுக்கு அதிபர் தரம் மூன்றும் அதிபர் தரம் இரண்டையும் கொண்ட இருவரை நியமிப்பது எந்த

அளவிற்கு பொருத்தமானதாகும். அதிலும் அதிபர் தரம் இரண்டு உள்ள ஒருவரை உப அதிபராகவும் அதிபர் தரம்

மூன்று உள்ளவரை அதிபராகவும் ஒரே பாடசாலையில் கடiமாற்றுவது எந்த அளவிற்கு பொருத்தமானதாகும். அதிலும் அப்பாவும் மகனும்.

இந்த நியமனங்கள் அனைத்தும் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவின் ஊடாகவே மேற்

கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாடசாலைக்கு பொறுப்பாக கம்பளை கல்வி வலயம் காணப்பட்ட போதும்

இதன் உடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லாமல் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. கம்பளை

வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருடாந்த இட மாற்றம் இடமாற்ற சபையின் ஊடாக மேற்க்

கொள்ளபட வேண்டிய நிலையில் வலயத்தின் அனுமதி இன்றி சர்வதிகார போக்கில் மத்திய மாகாண கல்வி

திணைக்களத்தின் தமிழ் பிரிவு அன்மை காலமாக மேற் கொண்டு வருகின்றன. இதனால் இந்த பிரதேசத்தில்

மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்

கல்வித்துறையில் ஒரு ஸ்தீரமற்ற தன்மையும் ஒரு தளம்பல் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு மேலும் அதிகமான முறைகேடான அதிபர் ஆசிரியர்

இடமாற்றங்களை புஸ்ஸல்லாவ பிரதேச பாடசாலைகளில் மேற்க் கொண்டு வருகின்றது. இதனால் மாணவர்கள்

பெற்றோர்கள் பாதிப்படைந்து வருகின்றன. அதிபர் ஆசிரியர்களும் மன உலைச்சல்களுக்கும் உள்ளாகி

உள்ளனர். குறிப்பாக கல்வி அதிகாரிகள் அதிபர் ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள்

அவர்களுக்கு சாதகமாகவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு நன்மை தர கூடியதாகவும் இருக்க

வேண்டும். அதே போல் வலய கல்வி பனிமனையின் அனுமதியையும் பாடசாலை சமூகங்களின்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவனையாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து தான் தோன்றி தனமாக நடக்க கூடாது.

இந்த விடயம் தொடர்பில கம்பளை கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது. இந்த

நியமனத்திற்கும் தாங்களுக்கும் எந்த விதமான பொருப்பும் இல்லை. நாங்களும் இதனை பொருத்தமானது அல்ல என்று

தான் கூறுகின்றோம். இந்த நியமனத்தை எங்களிடமும் கேட்காமல் மத்திய மாகாண கல்வி திணைக்கள தமிழ்

பிரிவே வழங்கியுள்ளது. நாங்கள் வலயத்திற்கு பொருப்பானவர்களாக இருக்கும் நிலையில் மாகாண கல்வி

திணைக்களம் பொருப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது.

மலையத்தின் பாடசாலை ஒன்றில்

Leave a Reply