இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
Spread the love

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி ,5 நிமிடத்தில் ரெடி பண்ணிக்கலாம் .
நம்ப கொஞ்சம் கடினமா தான் இருக்கும் .ஆனால் அது தாங்க உண்மை .

எங்க வீட்டில் இட்லி மாவில், எப்படி ஜிலேபி செய்வது ,என்பதை பார்க்கலாம் வாங்க .

இந்த ஜிலேபி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன .?
இலகுவாக இட்லி மாவில் ஜிலேபி செய்வது எப்படி ..?

வாங்க அதை பார்க்கலாம் .

செய்முறை ஒன்று

ஒரு பாத்திரத்தில் மூன்று கரண்டி இட்லி மாவு எடுத்து வைத்திருங்க .
துளி அளவு பூட் கலர் சேர்க்க போகிறோம் சேர்த்திருங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க .குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் ,இந்த பூட் கலரை சேர்த்து கொள்ளாதீங்க .

கலர் வேண்டும் என்றால், இரண்டு குங்கும பூ சேர்த்து கொள்ளுங்க ,இதே கலர் கிடைக்கும் .


இது கூட அரை கரண்டி பேர்கிங் பவுடர் சேர்த்து கொள்ளுங்க .ஒரு கரண்டி மைதா மா சேர்த்து கொள்ளுங்க .

மைதா மா பிடிக்கல அப்டி என்றால் சோளம் மா ,இல்லாட்டி அரிசிமா சேர்த்து கொள்ளலாம் .


இந்த இட்லி மாவை திக்காக்கவே ,கட்டியாகவே மைதா மா சேர்த்து கொள்கிறோம் .நன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி வாங்க .

இது தான் இதனுடைய பதம் ,இப்படி வரணும் மா.

இப்போ பாத்திரம் ஒன்று எடுத்து கொள்ளுங்க .அதில சீனி பாகு செய்துகொள்ளணும் .


ஒரு காப்பு அளவு சீனி எடுத்து கொள்ளுங்க .அது கூட தேவையான தண்ணீர் விட்டு கொள்ளுங்க .கம்பி கலராக ஜிலேபி வந்த பின்னர், அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

அடுத்து ,அடுப்பில கடையா வைத்து ,தேவையான எண்ணெய்
விட்டு கொள்ளுங்க .

இப்போ இந்த ஜிலேபி .ஜிலேபி வடிவில்செய்வதற்கு ஆச்சு வேண்டும். அது இல்லாத படியால் .கீழே படத்தில் உள்ளது போன்று ஒரு .பையில் மாவு ஊற்றி. அதில் ஓட்டை போட்டு இப்படி ஊற்றி கொள்ளுங்க .

ஜிலேபி வடிவிலே செய்துக்கலாம் .எண்ணெய் கிட்ட வந்து பிழியும் போது ஜிலேபி பெரிதாகி வரும் .

ஜிலேபி வடிவில் நமக்கு கிடைக்கும் .
ஜிலேபி பொரியும் சத்தம் அடங்கினால், ஜிலேபி ரெடியாடிச்சு என்று பொருள் .

சீனி பாணியில் சுட்டு வைத்த ஜிலேபியை போட்டிருங்க ,.இரண்டு நிமிடம் அதனை அப்படியே விடுங்க .

இரண்டு நிமிடம் களித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிடுங்க .

கடையில் உள்ள அதே ஜிலேபி நமக்கு கிடைத்துள்ளது ,
உங்களால் நம்பவே முடியல, எப்படி இட்லி மாவிலை ஜிலேபி செய்வது என்பது .

அது தாங்க சமையல் தந்திரம் . இப்படி வீட்டில முயற்சித்து சமையல் செய்து அசத்துங்க மக்களே.

Leave a Reply