அதிகாரிகளுக்கு கோட்டபாய அதிரடி உத்தரவு

Spread the love

அதிகாரிகளுக்கு கோட்டபாய அதிரடி உத்தரவு

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான

சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (26) முற்பகல் ஜனாதிபதி

அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இப்பணிப்புரையை விடுத்தார்.

ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும் போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம்

செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவூட்டினார். சட்டத்திற்கு புறம்பான முறைகளில் மீன்களை பிடிப்பதை

நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

ஏற்றுமதி நிறுவனங்கள் தமது கப்பல் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்வதாக மீனவ தொழிற்சங்க

பிரதிநிதிகள் தெரிவித்தனர். தாம் ஏற்றுமதி கைத்தொழிலில் மாத்திரம் தங்கியுள்ளதால், தமது விளைச்சலுக்கு உரிய சந்தை

வாய்ப்புக்கள் கிடைக்காமை பாரிய பிரச்சினையாக உள்ளதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் மூலம் இப்பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கூறிய ஜனாதிபதி, ஏற்றுமதியாளர்களுடன்

படகு உரிமையாளர்களையும் இணைத்துக்கொண்டு தேவையான எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

அதிகாரிகளுக்கு கோட்டபாய

Leave a Reply