Category: மருத்துவம்
மருத்துவம் உடலில் ஏற்படும் நோய்கள் எவ்வாறு பரவுகிறது ,அதனை எவ்விதம் தடுப்பது என்பது தொடர்பான குறிப்புக்கள் இந்த மருத்துவம் பகுதியில் பகிர படுகிறது
நாள் தோறும் குளித்து வந்தால் இந்த நோய்கள் பறந்து போகும்
நாள் தோறும் குளித்து வந்தால் இந்த நோய்கள் பறந்து போகும்
நாள் தோறும் நாம் குளித்து வந்தால் ,உடலில் உள்ள நோய்கள் பறந்து விடும் .
காலையில் எழுந்தவுடன் நாள் தோறும் குளித்து வாங்க .
மண் பானையில் எழுந்து குளிர்ந்த தண்ணீர் குடித்து வாங்க .
வயிற்றோட்டம் தானாக போயிடும் .
உடலுக்கு உள்குழியல் மட்டும் வெளியில் குளியல் என்பது முக்கியமானதாகும் .
உடலுக்கு நீர் சத்து அதிகம் வேண்டியுள்ளது .
நாள் தோறும் குளித்து வந்தால் இந்த நோய்கள் பறந்து போகும்
எமக்கு குளிர் நீர் முக்கியம் ,தும்மல் ,சலி ,உடலின் உள்ளே உள்ள குப்பைகள் யாவும் வெளியே வந்திடும் .
ஆதாலால் மனித உடலுக்கு குளியல் அவசியமாகிறது .
மல சிக்கல் உடல் சோர்வு ,மற்றும் நன்றாக தூக்கம் வரும் ,அதற்கு 20 நிமிடம் குளியல் அவசியமாகிறது
இதோ இந்த காணொளியை முழுவதுமாக அபார்த்து இந்த குறிப்பை தெறிந்து கொள்ளுங்க மக்களே .
நோயின்றி வாழ உடலை பாதுகாப்பபோம் .
வயிற்று வலி குணமடைய இதை சாப்பிடுங்க பறந்து போகும்
வயிற்று வலி குணமடைய இதை சாப்பிடுங்க பறந்து போகும்
மனிதர்களுக்கு கடுமையான வயிற்று வலி சிலவேளைகளில் ஏற்படும் ,அப்பொழுது இதை சாப்பிடுவதால் அந்த வயிற்று வலி பறந்து போகும் .
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் மருத்துவம் உள்ளது . அவ்வாறான மருத்துவ பொருட்களை ,உண்ணும் உணவுகளில் தினமும் சேர்த்து வந்தால் நாம் நோயின்றி ஆரோக்கியமுடன் வாழலாம் .
இப்போ இந்து வயிற்றி வலி குணமடைய நாம் எதை சாப்பிட வேண்டும் .
இதோ இந்த குறிப்பில் அதனை பார்க்கலாம் .
உட் கொண்ட உணவுகள் ஜீரணமாகாத நிலையில் ,இந்த வயிற்று வலி ஏற்படுகிறது .
வயிற்று வலி குணமடைய இதை சாப்பிடுங்க பறந்து போகும்
நாம் இந்த ஜீரணத்தை போக்கிட , இந்த உணவை உட்கொண்டு ,வந்தால் வயியற்று வலி பறந்து போகும் .
ஏப்பம் ,முதுகு தண்டு வலி ,வயிறுமுறுக்கல் ,பொருமல் போன்ற நிலை ஏற்படுகிறது .இவை ஏற்பட இந்த உணவு ஜீரா இன்மை காரணமாகிறது .
இந்த நோயினை முற்றிலும் போக்கிட மிக முக்கிய மருத்துவ குறிப்பு சித்த வைத்தியத்தில் உள்ளது .
அந்த சித்த வைத்தியம் என்பது நாம் உட் கொள்ளும் உணவுகளின் குறிப்பாகும் .
அதற்காக நாம் இப்பொழுது எடுத்து கொள்ள வேண்டிய மூலிகை ,ஓமம் . ஓமம் அடி வயிற்றில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் .
எண்ணெய் உணவுகளை உட்கொள்ளு பொழுது அவை ,வயிற்றின் அடிப்பகுதியில் பதிந்து விடுகின்றன .அவற்றை இந்த ஓமம் நீக்கி கொள்ளும் சக்தி கொண்டது .
கச கசா சிற்றின்பத்தை தூண்டும் ,இது ஆண்களுக்கு தத்து விருத்தியை அதிகரிக்கும் .முக அழகிற்கு இது முக்கியமான மூலிகையாகும் .முகப்பரு ,முக சுருங்கங்களை இது போக்கும் .வயிற்று பொருமல் ,நரம்பு தளர்ச்சியை நீக்கும் .
கருப்பட்டி தூள் ,மலசிக்கல் ,மலசிக்கல் கட்டு படுதலை நீக்கும் ,குளிர்ச்சியான பனை வெல்ல தூளையும் நாள்தோறும் உண்டு வாருங்கள் .
இவை யாவற்றையும் வறுத்து எடுத்து கொள்ளுங்கள் ,அதன் பின்னர் வெல்லத்தை இதில் அரைத்து சாப்பிட்டு வாருங்கள் .
நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டின் பின்னர் உட்க்கொண்டு வந்தால் ,உங்கள் வயிற்று வலி பறந்து போகும் .
இன்றே இவற்றை நாள்தோறும் உணவில் சேர்த்து வாருங்கள் மக்களே .வந்த நோய்கள் பறந்து விடும் .
உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது
உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது
உலகளாவிய ரீதியில் மக்கள் அதிகம் உப்பை உணவில் சுவைக்காக சேர்த்து வருகின்றனர் .
இந்த உப்பை உணவில் அதிகம் சேர்ப்பதால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது .
இதுவே இதயத்தை பாதிக்கிறது .இதனால் உடல் நிலை கெட்டுப்போகிறது .
உணவில் அதிக உப்பை சேர்ப்பதால் வாயுக்கு சுவையாக உணவுகள் கிடைக்கலாம் .
ஆனால் நமது வாழ்வின் வாழும் ஆண்டு சுருங்கி விடுகிறது என்ற அபாயகர ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
ஐந்து லட்சம் மக்கள் மத்தியில் நடத்த பட்ட ஆய்வில் அதிகம் உப்பை உணவில் சேர்த்து கொள்ளும் ஆண் பெண்களில் பெண்கள் ஒன்றரை வருடம் ஆயுளை குறைத்து கொள்கின்றனர் .
அதுவே ஆண்கள் இரண்டரை வருட ஆயூளை குறைத்து கொள்ளும் நிலை கண்டு பிடிக்க பட்டுள்ளது.
மேலும் உப்பை அதிகம் உண்கின்ற மக்கள் அகால மரணத்தை அதிகம் சம்பாதித்து கொள்கின்றனர்.
இதயத்தின் அளவு அதிகம் வழமைக்கு மீறி துடித்து விடுகிறது .இதனால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இந்த உயிராபத்து உப்பால் இடம்பெறுகிறது.
இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவை மாரடைப்பை ஏற்படுத்தும் .ஆக உப்பை சுவைக்கு அதிகம் சேர்ப்பதால் உங்கள் உடல் நிலைக்கு நீங்களே கேடு விளைவித்து கொள்கின்றீர்கள் .
அதனால் உணவில் உப்பை குறைப்போம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பபோம் .
அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL
அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL
பெண்களுக்கு அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது .இதனை ஏற்படுத்தும் காரணி என்ன ..?
பெண்ணின் கருவுருவத்தை சுற்றி காணப்படும் கருப்பையில் ஏற்படும் அது இரத்த குருதியாக வெளியேறும் காரண தொழில் பாடு எங்கு உருவாகிறது .
மாதவிடாய் என்பது கருப்பையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக இரத்த கசிவு ஏற்படும் இதன் பொழுது வலிகள் ஏற்படும்.
இந்த வலிகளை கட்டு படுத்த அல்லது இது ஏற்பட முக்கிய காரணம் என்ன ..?மாதவிடாய் இல்லாத காலத்திலும் வலிகள் ஏற்படும் அது எவ்வாறு ஏற்படுகிறது.
கண்டிப்பாக பெண்கள் இதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .
மலத்துடனும் இந்த இரத்த கசிவு ஏற்படும் ,ஆகவே பெண்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது
உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது
மக்கள் நாள் தோறும் உண்ணும் உணவுகளில் உணவு ஒவ்வாமை தன்மை காணப்படுகிறது .
இந்த உணவு ஒவ்வாமை என்பதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கே கவனியுங்கள்.
மக்களுக்கு அழற்சி ஓவ்வாமை ஏற்பட காரணம் என்ன ..? அதனை எவ்வாறு தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது
இந்த ஒவ்வாமை என்பது தோள்கள் மூலமே வெளிப்படும் ,அது எவ்வாறு தென்படுகிறது என்பதை பார்க்கலாம் .
உணவு ஒவ்வாமை என்பது சக்தி ,வயிற்றோட்டம் மற்றும் தோல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக அவதானிக்க முடியும்.
எந்த உணவுகளை நாம் உண்னக் கூடாது என்கிறார்கள் என்றால் ,நண்டு றால கச்சான் ,பால் முட்டை அண்ணாசி பழம் போன்றவற்றுக்கு அதிகமாக காணப்படும் .
அப்படி என்றால் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.
சரி வாருங்கள் நம்மவர் கூடும் இந்த மருத்துவ குறிப்பை காதில் போட்டு கொள்வோம் வாருங்கள்.
விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents
விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents
விபத்தின் பொழுது பாதிக்க பட்டவர்கள் உடனே செய்யக்கூடாத விடயம் என்ன என்பதை நாங்கள் இங்கே பார்த்துக்கொள்ளுவோம் .
நமது மக்கள் விபத்தில் காயங்கள் ஏற்பட்டால் உடனே செய்து கொள்ளும் தவறான முறைமைகள் என்ன என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம் .
விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents
விபத்தின் பொழுது உடல் உறுப்புக்கள் துண்டிக்க பட்டால் அதனை தூய்மையான பொழித்தீன் பையுக்குள் வைத்து அதனை ஐஸ் கட்டிக்குள் வைத்து மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் அதனை பொருத்த முடியும் என்கின்ற விடயம் இங்கே முதன்மை பெறுகிறது .
மேலும் வாய் ,மூக்கு ,கை கால்களில் காயங்கள் ஏற்படும் பொழுது அதில் ஓடும் இரத்த போக்கை கட்டு படுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்கின்ற விடயமும் இங்கே முதன்மை பெறுகிறது .
மிக முக்கியமான மருத்துவ குறிப்பாக இந்த விபத்தின் பொழுது நாம் செய்திட கூடாத விடயங்கள் விளக்க படுகின்றன .
மக்கள் உதாசீனமாக செய்து கொள்ளாது இதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .
படுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்
படுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்
மருத்துவம் ;தாம்பத்திய விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
படுக்கை அறையில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்
படுக்கை அறையில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்
பாலியல் விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனைவியை முறையாக அணுகத்
தெரியாதவர்களாகவும், வாழ்க்கையை ருசிக்கத் தெரியாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
தவறு: மனைவி எப்போதுமே கணவரிடம் அன்பையும், பாசத்தையும் தான் எதிர்பார்ப்பார். பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொள்வதில்லை.
நிஜம்: கணவருக்கு பாலியல் ஆர்வம் இருப்பதுபோல் மனைவிக்கும் இருக்கும். பசி, தாகம் போன்று பாலியல் செயல்பாடும், திருப்தியும் மனைவிக்கு அத்தியாவசியமானதுதான். அதை முழுமையாக
நிறைவேற்ற வேண்டிய கடமை கணவருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் அன்பும், பாசமும்தான் பாலியல் செயல்பாடுகளுக்கான
எரிபொருள் போன்றது. அதனால் அன்பு நிறைந்த தம்பதியினரே பாலியல் செயல்பாடுகளின் எல்லையை அடிக்கடி எட்டுகிறார்கள்.
படுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்
தவறு:பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு அவசியம்.
நிஜம்: மனைவியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு தேவையில்லை. தம்மால் இயலாமல் போய்விடுமோ என்ற பதற்றமே அதிக தயாரெடுப்பிற்குரிய
காரணமாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு போன்று இதற்கும் தயாராகவேண்டியதில்லை. பதற்றம் கொள்ளவேண்டிய
அவசியமும் இல்லை. இயல்பான அணுகுமுறையே முழுமையான தாம்பத்யத்திற்கு தேவை. ஆண்களின் தேவையற்ற
தயாரெடுப்புகள் முரண்பாடான சூழலை உருவாக்கி, மனைவியை படுக்கையில் மனங்கோண வைத்துவிடும்.
தவறு:மனைவியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டே அதிக நேரம் செல்போனை துழாவிக்கொண்டிருப்பது மற்றும் சாட்டிங் செய்வது.
நிஜம்: படுக்கை அறை சூழல், தம்பதிகளின் சுவாரஸ்யமான பேச்சு, அவர்களது தோற்றப்பொலிவு போன்ற அனைத்துமே நிறைவான தாம்பத்ய தொடர்புக்கு மிக அவசியம். மனைவி பாலியல்
விருப்பத்தோடு நல்ல மனநிலையில் இருக்கும்போது கணவர் செல்போனில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் அது
படுக்கை அறை சூழலை கெடுத்துவிடும். மனைவிக்கு எரிச்சலும், சந்தேகமும் தோன்றிவிடும். பெரும்பாலான குடும்பங்களில்
மகிழ்வான தாம்பத்யத்திற்கு செல்போன் பெரும் இடைஞ்சலாக இருந்துகொண்டிருக்கிறது.
தவறு:தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டியதில்லை.
நிஜம்: பாலியல் செயல்பாட்டில் கணவன்- மனைவி இருவரின் உடலும்- மனமும் ஒன்றிணைகிறது. ஒவ்வொரு முறை இணைவதும்
வசந்தமான நினைவுகளாக இருக்கும். கட்டிப்பிடித்தலில் இருவரும் சமநிலையை கடைப்பிடிக்கிறார்கள். இருவரும் சமமாக இணைந்தால்தான் கட்டிப்பிடித்தல் முழுமைபெறும். ஆனால்
பாலியல் செயல்பாட்டின்போது அந்த சமநிலையில் ஏற்றத்தாழ்வு உருவாகிவிடுகிறது. மனைவியின் உணர்வுகளுக்கும்,
விருப்பங்களுக்கும் உரிய மதிப்பை அளிக்காமல், “என் உடல்.. எனது ஆசை.. எனது இன்பம்..எனக்கு மட்டுமே திருப்தி..” என்ற நிலைக்கு கணவன் சென்றுவிடக்கூடாது. இப்படிப்பட்ட மனோநிலை
கொண்டவர்கள் தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு உரிய மரியாதையை வழங்கமாட்டார்கள். தாம்பத்ய
செயல்பாடுகளில் நிர்பந்தம், திணிப்பு, அடிமைத்தனம், அறுவறுப்பு, சுயநலம் போன்ற எதற்கும் ஆண்கள் இடம்கொடுத்துவிடக்கூடாது.
தவறு:ஆண்கள் டென்ஷனை தீ்ர்க்கும் மருந்து போல் மனைவியை பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
நிஜம்: ஆண்களுக்கு ஏற்படும் பல பாதிப்புகளுக்கு திருமணம்தான் தீர்வாக இருக்கும் என்ற தவறான கருத்து சமூகத்தில் நிலவியதுண்டு. தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும்
பிரச்சினைகளுக்கும் மருந்துபோல் பாலியல் இன்பம் தீர்வு தரும் என்ற நம்பிக்கையும் சிலருக்கு இருக்கிறது. சிலர் தூக்கத்திற்கான மருந்துபோல் பாலியல் செயல்பாட்டை
பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கணவன்-மனைவி இடையேயான அன்பை பெருக்கவும், வாழ்க்கையில் ஆனந்தத்தை ஏற்படுத்தவும் அத்தியாவசியமான தேவையாக பாலியல்
இருக்கிறது. அதே நேரத்தில் நெருக்கடிகளில் இருந்து மனதை மீளவைக்கும் சக்தியும், கணவன்-மனைவி இடையேயான சின்னச்சின்ன சண்டைகளை தீர்த்துவைக்கும் சக்தியும் பாலியல்
செயல்பாட்டிற்கு இருக்கிறது. மருந்தை நோய் வந்தால் மட்டுமே பயன்படுத்துவோம். அதுபோல் கணவர் தாம்பத்யத்தை கசப்பு மருந்துபோல் ஆக்கி மனைவியை முகம்
சுளிக்கவைத்துவிடக்கூடாது. தம்பதிகளுக்கு எல்லா காலகட்டத்திலும் பாலியல் இன்பம் தேவை.
தவறு:உடல் சுத்தம் இல்லாமல் படுக்கை அறையில் மனைவியை அணுகுவது.
நிஜம்: பெரும்பாலான ஆண்கள் உடல் சுத்தத்தோடு படுக்கை அறைக்கு செல்வதில்லை. உடல் சுத்தம் என்பது காலையில் அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டுமே அவசியம் என்று
நினைக்கிறார்கள். படுக்கைக்கு செல்லும்போது உடல் சுத்தமும், மனஉற்சாகமும் மிக அவசியம். ஆண்கள் அலட்சியத்தால்தான் உடல் சுத்தத்தை பேண மறுக்கிறார்கள். ஆண்களில்
பெரும்பகுதியினர் ‘‘படுக்கைக்கு வரும்போது நான் இப்படித்தான் இருப்பேன். நீதான் சுத்தமாக குளித்து அலங்காரம் செய்துகொண்டு அசத்தலாக வரவேண்டும்’’ என்பதுபோல் மனைவியிடம்
பேசுகிறார்கள். மனைவி அழகாக இருக்கவேண்டும் என்று கணவர் விரும்புவதுபோல், கணவர் அழகாக இருக்கவேண்டும் என்று மனைவியும் விரும்புவார் என்ற நிஜம் பெரும்பாலான ஆண்களுக்கு
புரிவதில்லை. இதில் இருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், உடல் சுத்தம் இல்லாத கணவரை மனைவி அரைகுறை மனதோடுதான் அனுசரிப்பார். அது முழு இன்பம் தராது.
தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க
தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க
தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்
குறிப்பிட்ட இவைகளை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம்
பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில்
முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம்
சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில்
ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க
- தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக
- ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.
- தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.
- தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள்
- சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.
- தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக
- அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு
- நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.
விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்
விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்
பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.
முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன்
மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.
ப்ராக்கோலி
கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது.
கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
மாதுளை
மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.
வாழைப்பழம்
சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும்
விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்
பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக,
உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.
முட்டை
முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும்
வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.
மஞ்சள்
சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும்.
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை
ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். தரையில் படுத்து
தூங்குவதன் மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மை என்னவென்றால் உடல் தோரணையை சரியாக வைத்திருப்பதுதான்.
மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க முடியாது. மெத்தையின் மென்மை தன்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சவுகரியமாக
தூங்குவார்கள். அப்படி தூங்குவது முதுகெலும்பு தோரணையை சீராக பேணுவதற்கு உதவாது. தரையில் தூங்கும்போது முதுகெலும்பை நேராக வைத்திருப்பதற்கு எளிதாக இருக்கும்.
தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது. தரையில்
படுக்கும்போது கிடைக்கும் மேம்பட்ட தோரணை முதுகெலும்பின் இயற்கையான வளைவை ஆதரிக்கும். இருப்பினும் முதுகெலும்பின் அழுத்தத்தைக் குறைக்க சிலர்
தலையணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதாவது முதுகின் கீழ் மெல்லிய தலையணையை வைக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மெத்தையில் படுப்பது உடலுக்கு மென்மையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உடல் எடைக்கு ஏற்ப அழுத்தம்
உண்டாகும். அதனால் முதுகுவலி அதிகரிக்கக்கூடும். சமதளமான மேற்பரப்பில் தூங்குவதன் மூலம் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.
தரையில் தூங்குவது குளிர்ச்சியான தூக்க சூழலை வழங்கும். அதாவது தரை குளிர்ச்சியாக இருக்கும் போது, உடல் வெப்பம் விரைவில் தணிந்துவிடும். குறிப்பாக
வெப்பமான கோடை மாதங்களில் அதிக உடல் உஷ்ணம் கொண்டவர்களுக்கு இந்த தூக்கமுறை சவுகரியமாக இருக்கும். கோடையில் படுக்கை அறை சூழல் குளிர்ச்சியாக
அமைந்திருக்க வேண்டும். அதற்கேற்ப ஏ.சி. பயன்படுத்தாதவர்களுக்கு தரையில் தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
இருப்பினும், எல்லோரும் தரையில் தூங்கக்கூடாது. வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை
பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையை பெற்று தூக்க நிலையை தீர்மானித்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய
நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற
பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக
அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.
ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.
அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள்
போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.
சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள்
கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை
எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.
வாழைப்பழத்தில் எதிர் நோயின் தாக்குதலை எதிர்த்து போராடும் திறனும்
உள்ளது,எதிரி வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடும் எதிர் தன்மை இதில் எதிராகவே நிறைந்து உள்ளது
இலங்கை இந்திய மக்கள் இயல்பாகவே அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வருகின்றனர் ,வாழைப்பூ வறை மலம் தடையினரி கழிக்க உதவுகிறது ,இதனால் என்னவோ நாளாந்தம் வாழைப்பழத்தை இவர்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்கின்றனர்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நிலத்தில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் எத்தகைய பலன்களை பெற முடியும் என்று இங்கே காணலாம்:
1) வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு
உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.
2) தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல்
அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
3) தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து
உடம்பில் உள்ள வலிகளை குறைக்கிறது. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.
4) அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.
5) பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.
6) ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை
ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.
7) தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.
8) தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. மேல்வாதம் மற்றும் கீழ்வாதம்
முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது.
தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகம் கல்லீரல் மற்றும் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள்
உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
மூக்கிரட்டை கீரை சூப்
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்
சிறு நீராக நரோயினால் உலக அளவில் பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இந்த சிறுநீரக நோயானது தொற்றி கொள்ள நாம் நாளாந்தம் அருந்தும் குடிநீர் முக்கியமான ஒன்றாகும்
இந்த நீரில் கால்சியம் படிந்துள்ளதால் அதி வேகமாக சிறு நீரக கல்லடைசல் ஏற்படுகிறது ,இது ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ,
வறண்ட நில பகுதியில் வசிக்கும் மக்கள் நீர் தட்டுப்பாடு காரணமாக ஆற்று நீர் மற்றும் மஞ்சள் காவி படர்ந்த ஒருவகை அசுத்த நீரினை அருந்துகின்றனர், இதனால் அதிக மக்கள் இவ்வகையான நோயிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்
கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்
கோடை காலத்தில் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி கட்டிகளை குணப்படுத்தும் வழியை காண்போம்.
கோடை காலத்தில் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். அந்த கட்டிகள் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் போல் வீங்கி வலியை ஏற்படுத்தும்.
இதற்கு ஆரம்ப நிலையிலேயே சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்வதுதான் சிறந்தது. வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி கட்டிகளை குணப்படுத்தும் வழியை காண்போம்!
- உடல் சூடுதான் கட்டிகள் உருவாகுவதற்கு காரணம் என்பதால் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கால் பாதங்கள், நகங்களின் மேற்பரப்புகளில்
- விளக்கெண்ணெய் தடவலாம். அது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்தன்மை கொண்டது. அதனால் கட்டிகள் உருவாகுவதை தவிர்த்துவிடலாம்.
- கட்டிகள் வருவதை தவிர்ப்பதற்கான மற்றொரு வழி தண்ணீர் பருகுவதுதான். உடலில் நீர்ச்சத்து நன்றாக இருந்தால் உடல் சூடாகாது. கட்டிகள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.
கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்
- ஒருவேளை கட்டிகள் உருவாக தொடங்கிவிட்டால் மஞ்சளை பயன்படுத்தலாம். மஞ்சளை நன்றாக அரைத்து தண்ணீரில் கெட்டி பதத்துக்கு குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை கட்டி இருக்கும் இடத்தில் பத்து போடுவதுபோல் பூசலாம்.
- இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்துவந்தால் சில நாட்களிலேயே கட்டிகளின் வீக்கம் குறைந்து விடும்.
- வேப்பிலையையும் பயன்படுத்தலாம். அதனை நன்றாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும்.
- கட்டிகளில் வீக்கம் அதிகமாக இருந்தால் கல் உப்பை பயன்படுத்தலாம். வாணலியில் கல் உப்பை கொட்டி லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதனை
- காட்டன் துணியில் சுருட்டி, கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்துவர வேண்டும்.
தொடர்ந்து செய்துவந்தால் கட்டிகள் குணமாகிவிடும். சீழ் பிடித்திருந்தாலும் உடைந்து வெளியேறிவிடும்.- உடலில் சக்தியின் எதிரி செயல் பாட்டின் ஊடகாவே எதிர் நோய் தாக்குதலில் இருந்து விடுதலை பெற முடியும்
எதிர் மறை நோய்களின் எதிர் சக்தியை அதிகரிக்க எதார்த்தமான செயல்களை கண்டறிந்து செயல்பட வேண்டியது நமது பொறுப்பாகும்
மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?
மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு, குறிப்பிட்ட வகை மாம்பழத்தை சாப்பிடுவது
பெண்களின் சருமத்தில் சுருக்கங்களை எதிர்த்துப் போராடவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்று கண்டறிந்துள்ளது.
மாம்பழத்தை ருசித்து சாப்பிடும் பலரும் அதன் தோல் பகுதியை ஒதுக்கிவிடுகிறார்கள்.
மாம்பழத்தின் தோல் பகுதியை வெட்டி நீக்கினால்தான் மாம்பழம் சாப்பிட்ட
திருப்தியே பலருக்கு உண்டாகும். ஆனால் பல ஆய்வுகள் மற்றும் சுகாதார நிபுணர்களின்
கருத்துபடி, மாம்பழத்தின் தோல் பகுதியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கிறது. அவை பல நோய்களை தடுக்கக்கூடும் என்று
சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மாம்பழத்தின் தோல் பகுதி கடினமாக இருப்பதும், கூழ் பகுதியை விட சுவை குறைவாக இருப்பதும் அதனை குப்பையில் போடுவதற்கு
காரணமாக அமைந்திருக்கிறது. மாம்பழ தோலை சாப்பிட விரும்பாவிட்டால் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மாம்பழ தோல் தரும் நன்மைகள்:
- மாம்பழத்தின் தோலில் அதன் கூழ் பகுதியை விட ஆன்டி-ஆக்சிடெண்டுகள் மற்று
- ம்
- புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற பல வகையான
- புற்றுநோய்களுக்கு எதிராக நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது. மாம்பழ தோலில் இருக்கும்
- ட்ரைடர்பென்ஸ் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற தாவர சேர்மங்களும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன.
- மாம்பழ தோலில், தாவரங்களில் காணப்படும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் எனும் சேர்மம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- இதய பிரச்சினைகளை தடுக்கவும் துணை புரியும். மேலும் மாம்பழத் தோலில் அதிக
- நார்ச்சத்து இருப்பதால் இதய பிரச்சினைகளை தடுக்க உதவும். ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி, நார்ச்சத்து நிறைந்த உணவை
மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?
- உட்கொண்டவர்களுக்கு இதய நோய் அபாயம் 40 சதவீதம் குறைவாக உள்ளது.
- மாம்பழ தோல்களை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
- கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவும். இதிலிருக்கும் லெப்டின் எனும் ஒரு வகை ஹார்மோன் ஆற்றல் நுகர்வையும், பசியையும் கட்டுப்படுத்தக்கூடியது
- .
- குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் பார்மசி மேற்கொண்ட ஆய்வில்,
நம் டாக் மாய்' மற்றும்இர்வின்’ ஆகிய இரண்டு மாம்பழ வகை களின் தோல்கள் - உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை குறைப்பது தெரியவந்துள்ளது.
- செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் மாம்பழ தோல் பயன்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பது செரிமான
- ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மேலும் அவற்றில் பசியைக்
- கட்டுப்படுத்த உதவும் சேர்மங்களும் உள்ளன.
- மாம்பழ தோல்களில் வைட்டமின் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் நோய்
- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.
- மாம்பழ தோலில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாகும் செயல் முறையை தாமதப்படுத்தும் என்று அறியப்படுகிறது. அமெரிக்க
- ஆராய்ச்சியாளர்கள் குழு, குறிப்பிட்ட வகை மாம்பழத்தை சாப்பிடுவது
- பெண்களின் சருமத்தில் சுருக்கங்களை எதிர்த்துப் போராடவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்று கண்டறிந்துள்ளது.
- மாம்பழத்தின் தோல் பகுதியை சாப்பிடும்போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினை
- உண்டாகலாம்.
- ஏனெனில் மாம்பழத் தோல்களில் யூருஷியோல் எனப்படும் ஒருவகை கலவை உள்ளது. இது ஒவ்வாமை எதிர்வினையை தூண்டும். இந்த
- யூருஷியோலை உட்கொள்வதால் சுவாசப்பிரச்சினைகளையும் சிலர் எதிர்கொள்ளக்கூடும்.
- அதனால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் மாம்பழ தோலை தவிர்ப்பது நல்லது.
- மாம்பழ தோலை சாப்பிட விரும்புபவர்கள் அது இயற்கை விவசாய முறையில்
- விளைவிக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்து கொள்வதும் நல்லது. ஏனெனில் தோல் பகுதியில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த பூச்சிக்கொல்லி
- மருந்துகளும் படிந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- ஏனென்றால் பழ தோலில் உள்ள பூச்சிக்கொல்லிகள்,
புற்றுநோய்கள் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
- ஈரான் மீதான புதிய வியூகம்
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
- ரசியா டிரம்ப் பேச்சு
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
தலை சுற்று ஏன் வருகிறது ..?
தலை சுற்று ஏன் வருகிறது ..?
மனிதருக்கு ஏற்படும் வியாதிகளில் ஒன்று தலைச்சுற்று,இந்த தலை சுற்றானது ஏன் எவ்வாறு ஏற்படுகிறது ,
அவ்விதம் ஏற்படும் தலை சுற்றை தடுக்க என்ன வழிகள் என்பதை நாம் தேடி கொண்டு உள்ளோம் அனால் அதற்க்கு தீர்வு ஏற்படதாக தெரியவில்லை
இந்த தலை சுற்று ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதோ தலை சுற்று ஏன் வருகிறது
என மருத்துவ மாணவர் தரும் விளக்கத்தையும் ,அதனை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே கவனியுங்கள்
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்
கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது
இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்
ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில்
மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப
காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.
பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.
ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால்
எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
வெண் புள்ளியிலிருந்து விடுதலை
வெண் புள்ளியிலிருந்து விடுதலை
வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை.
வெண் புள்ளியிலிருந்து விடுதலை தரும் வைத்தியம்
வெண்புள்ளி நோய்
மனித இனத்தை பாதித்து வருகின்ற பல நோய்களில் தோலின் மேற்பகுதியில் ஏற்படும் வெண் புள்ளிகளையும் சேர்க்கலாம். மேலை நாட்டு மருத்துவத்தில் இந்தக்
குறைபாட்டிற்கு நிவாரணியில்லை. ஆனால் தொன்றுதொட்டு மனிதர்களை பாதித்து வரும் வெண் புள்ளிகளுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது.
சரக் வைத்தியர் என்பவர் தான் இந்த நோய்க்கு முதல் முதலாக மருத்துவத்தை கொண்டு வந்தார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நோய்க்கு ஆயுர்வேதம்
அரியதொரு தீர்வை தந்திருக்கிறது. இந்த நோய் பாதித்தவர்கள் பலரும் முழுமையாக குணமடைந்து விட்டார்கள். பலர் குணமடைந்து வருகிறார்கள்.
குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த வைத்தியர் ரமேஷ் நாயுடு தன்னுடைய வைத்தியத்தால் 28 ஆண்டுகளுக்கு மேலாக வெண்புள்ளிகளுக்குச்
சிகிச்சை அளித்து வருகிறார். இவரின் வைத்தியம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் குணமாகி உள்ளனர்.
இந்த நோயின் அடிப்படை காரணம் என்ன?
நமது உடலில் வைட்டமின் பி, ஹீமோகுளோபின், ரத்தம் இவை போதுமான அளவில் இல்லாதபோது இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய் எந்த
வயதினரையும் தாக்கலாம். இந்த நோய் குணமாவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. குணமாவது நோயாளியின் வயது, நோயின் தீவிரம், உடல்நிலை மாறுபாடு,
மனஅழுத்தம் என்ற பல அம்சங்களை சார்ந்தது. கபம், பித்தம், வாதம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பொறுத்து நோயின் நிலை மாறுபடும். இந்த மாற்றங்கள்
சமன்பாட்டில் இருக்க வேண்டும். இவை ஏறுமுகமாக இருக்குமாயின் சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுகின்றன.
உணவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த வெண்புள்ளிகளை குணப்படுத்த முடியுமா?
வெண் புள்ளியிலிருந்து விடுதலை
கொய்யா, ஆரஞ்சு பழங்கள் உண்ணுவதை குறைக்க வேண்டும். மேலும் ஸ்வீட் லைம், கருப்பு திராட்சை,
பச்சை வாழைப்பழம், முள்ளங்கி, பூசணிக்காய், மீன், கோழிக்கறி, முட்டை, உளுத்தம் பருப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள், புளி இவைகளை முடிந்த
அளவிற்கு நமது உணவு பட்டியலில் இருந்து குறைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வேகவைத்து
சேர்க்க வேண்டிய உணவு
உணவில் சேர்க்க வேண்டும். செவ்வாழை, மாதுளம்பழம், பப்பாளி, பொன்னாங்கன்னி கீரை, வெந்தயம், சுரைக்காய், கருப்பு
மூக்கடலை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைத்தியர் ரமேஷ்நாயுடு சொந்தமாக மருந்து
தயாரிக்கிறார். இந்த மருந்து 24 மணி நேரத்திற்குள் மாறுபாட்டை கொண்டு வரும். வைத்தியர் ரமேஷ்நாயுடு இந்த மருத்துவ சேவையில் கடந்த 27 ஆண்டு காலமாக ஈடுபட்டிருக்கிறார்.
வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. இது தொடர் சிகிச்சையால் குணமாகும் தன்மை உடையது.
தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை. இது பரம்பரை நோய் அல்ல.
நூறில் ஒருவருக்குத்தான் இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது
. அலோபதி மருத்துவத்தில் இந்த நோய்க்கு இதுவரையிலும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.
ஆயுர்வேதம் ஒன்றுதான் இந்த நோயை குணப்படுத்தும்.
குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு
குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு
சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும்.
குளிக்காவிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
குளியல்
தினமும் குளிப்பவர்களுக்கு, குளியல் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே தெரியும். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் குளியலை உடலுக்கு தேவையான முக்கியமான
விஷயமாக குறிப்பிடுகிறது. எந்த நீரில், எப்படி, எந்த நேரத்தில் குளிக்கவேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குகிறது.
கோடை காலம் உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் காலமாகும். அதனால் உடல் எதிர்கொள்ளும் அசவுகரியங்களை ஓரளவு கட்டுப்படுத்த குளியல் உதவுகிறது. அதோடு
உடலின் புறப்பகுதியில் உள்ள அழுக்கை போக்கவும் துணைபுரிகிறது.
எப்போது குளிக்க வேண்டும்?
காலையில் குளிப்பது மிக நல்லது. காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வியர்வை வெளிப்பட்ட உடலோடு குளிக்கவேண்டும். காலை உணவுக்கு
முன்பாக குளித்திடுவது சரியானது. அதிக பசியோடு இருக்கும்போதும், சாப்பிட்ட உடனேயும் குளிப்பது உடலுக்கு ஏற்றதல்ல. காலையில் தலைக்கு குளிப்பதும், இரவில் தலைக்கு கீழ் கழுவுவதும் உஷ்ணத்தை வெளியேற்றும் வழிமுறையாகும்.
தினமும் உடலைக் கழுவும் நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்த சாறு சேருங்கள். கோடை காலத்தில் அது உடலுக்கு உற்சாகத்தை தரும். சரும நோய்களும்
அகலும். வெட்டி வேர், சந்தனம் மற்றும் துளசி, வேப்பிலை போன்றவைகளை கலந்த நீரிலும் குளிக்கலாம்.
எப்படி குளிக்கவேண்டும்?
குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு
தலைக்கு குளிக்கும்போது முதலில் தலையில்தான் தண்ணீரை ஊற்றவேண்டும். சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம்
செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும். குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, பிடித்தமான எண்ணெய்யை உடலில்
தேய்த்துவிட்டு குளிக்கவேண்டும். அதனால், கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.
சோப் பயன்படுத்தலாமா?
சோப் பயன்பாடு சருமத்தை வறட்சி்க்குள்ளாக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதனால் தினமும் ஒரு தடவை மட்டும் சோப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்றாக
பயறு தூள், கடலை மாவு போன்றவைகளை உபயோகிக்கலாம். குளிக்கும்போது பயன்படுத்த ஆயுர்வேத சூரணம் உள்ளது. அதனை பயன்படுத்தலாம். அது எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றது.
தலையில் ஷாம்புவுக்கு பதில் செம்பருத்தி தாழி பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கோடை உஷ்ணத்தால் முடியில் ஏற்படும் பல்வேறு
பாதிப்புகளை அது போக்கும். நெல்லிக்காயை உலரவைத்து தயாரித்த தூள், பயறு தூள் போன்றவைகளாலும் கூந்தலை கழுவலாம். உடல் அதிகமாக சூடானாலும் முடி
உதிர்தலும், பொடுகு பிரச்சினையும் தோன்றும். கூந்தலை மேற்கண்ட முறையில் பராமரித்தால் அந்த தொல்லைகள் அகலும்.
வெயிலில் செல்லும்போது முகம் கறுத்துப்போகாமல் இருக்க மல்லியை பயன்படுத்தலாம். ஒரு பிடி மல்லியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து
அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். கோடைகாலத்தில்
பெண்கள் கூந்தல் மற்றும் சரும அழகில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?
பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை என்றாலும் அவை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.
நிறைய பேர் உணவு பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.
சூடான உணவு பொருட்களையும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப்
பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
- ஹார்மோன் வளர்ச்சியை சீர்குலைக்கும்:
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.
இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடியவை. மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை
சீர்குலைக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு ஹார்மோன், தைராய்டு ஹார்மோனாகும். இது
படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.
- சிறுநீரக கற்கள்:
பிளாஸ்டிக் கொள்கலனில் சூடான உணவை சேமித்துவைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை சூழ்ந்திருக்கும் வெப்பநிலை
உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே சூடான உணவு
வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- மார்பக புற்றுநோய்:
பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?
மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி,
கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி
புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணமாகும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது
அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் டையாக்சின் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது.
- கல்லீரல் புற்றுநோய்:
நோய் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு ரசாயன பொருள், பித்தலேட்ஸ். இது சாக்லெட்டுகள், இனிப்புகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் வெளிப்புற கவர்கள் (ரேப்பர்கள்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இது உணவு பொருளுடன் வினை
புரிந்து கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுத்துவிடும். விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும். ஆண்களின்
ஹார்மோன் அளவும் பாதிப்படையக்கூடும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூடும்.
- நோய் அபாயத்தை அதிகரிக்கும்:
ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து படி, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை
உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில்
பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் பெண்களுக்கு
பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.








