இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!

இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!

வீழ்ந்தவர்கள் நாமென்று
விலாசம் தந்தவர்கள்
வீழ்கின்ற காலமிது
வீசுது காற்று நன்று

உலகோடி தினம் அன்று
ஊதி திரிந்தவர்கள்
ஊர் திரண்டு விரட்டும் காலம்
ஊடகத்தில் தினம் இன்று

நடித்து வெடித்து
நகைச்சுவை குழைத்து
கழித்து திரிந்தார்
காலடியில் கல்லடி

படித்து முடித்தார்
பக்குவம் தொலைத்தார்
மன்றில் ஏறி
மறைகழண்று வீழ்ந்தார்

அடித்து பிடித்து
ஆட்சி அமைத்தார்
அந்தோ பார் – இன்று
ஆட்சி கவிழ்கிறது

வென்றவர் தாமென்று
வெறியோடு அலைந்தால்
காற்சட்டை கிழியும்
கல்லறை அழைக்கும்

விதைக்கும் முன் விதையின்
விளைச்சல் தெரிந்தால்
வாழ்வு செழிக்கும்
வழியெங்கும் மணம் வீசும்

இன்று பார்த்தாயா
இராவணன் வருகிறான்
துட்டகை முணுக்களே
தூரே ஓடிவிடும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-04-2022

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.