கத்திகள் எழுகிறது …!

கத்திகள் எழுகிறது …!
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கத்திகள் எழுகிறது …!

திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்

பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்

இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்

கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே

கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்

ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்

கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.