பெண் உலாவும் இரவு வரும் ..!

பெண் உலாவும் இரவு வரும் ..!
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பெண் உலாவும் இரவு வரும் ..!

ஆமி பொலிஸ் வீதியில
அன்றாடம் நிற்கையில
வாள் வெட்டு நடக்குதாம்
வம்புகள் வெடிக்குதாம்

தலை பா கட்டிகளும்
தலை தெறிக்க ஓடுதாம்
வெள்ளை வெட்டிகளோ
வெறியோடு சிரிக்குதாம்

குண்டி விழும் காற்சட்டை
குமரிகள் முன் விழ
பொக்கை வாய் பாட்டிகளும்
பொல்லெறிந்து சிரிக்குதாம்

தன் பதவி தான் காக்க
தமிழருக்குள் சில்லறைகள்
நேர்ந்து விட்டதுகள்
நெடுகிலும் ஆக்கினைகள்

குடல் பிடுங்கி வெளி எறிந்து
குரல் ஒடுங்கி சாகடிக்க
ஆள் இல்லா நிலையின்றோ
அதனாலோ ஆடுகிறார்

விடிகின்ற ஆதவனின்
விடியலின் ஒளியிலே
காவாலி கரை சேரும்
கால் தடம் மாறும்

இரவு வெளிச்சத்தில்
இளம் மாது உலாவும்
காலம் அது மலரும்
கரிகாலன் வருவான் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-03-2022

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.